சென்னை மாநகராட்சி, பொதுமக்கள் முன்கூட்டியே தெரிவிக்கும் தகவலின் அடிப்படையில், அவர்களின் வீடுகளிலிருந்து பழைய சோபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் போன்ற திடக்கழிவுகளை சேகரித்து அகற்றும் புதிய சேவையை செயல்படுத்தி வருகிறது. இதுவரை 13 சனிக்கிழமைகளில் 1,678 நபர்களிடமிருந்து 623.42 மெட்ரிக் டன் பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன. இன்று (ஜன.03) மட்டும் 91 நபர்களிடமிருந்து 41.26 மெட்ரிக் டன் பொருட்கள் சேகரிக்கப்பட்டு, கொடுங்கையூரில் உள்ள எரியூட்டும் நிலையத்தில் விஞ்ஞான முறையில் அகற்றப்பட்டது.