"Community of Metro" என்ற நிறுவனம் உலகளவில் 32 மெட்ரோ ரயில் சேவைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. இதில், பயணிகளுக்கு மிகவும் திருப்திகரமான சேவை வழங்கும் மெட்ரோ நிறுவனங்களில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முதலிடம் பிடித்து வரலாற்று சாதனை செய்துள்ளது. இந்த ஆய்வில், சுமார் 6,500 பயணிகள் கருத்து தெரிவித்ததில், பெரும்பாலானோர் 5-க்கு 4.3 மதிப்பெண் வழங்கியுள்ளனர் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த வெற்றி, சென்னை மெட்ரோவின் தரமான சேவைக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதப்படுகிறது.