கடந்த ஆண்டில் சென்னை மெட்ரோவிற்கு ரூ.1,003 கோடி இழப்பு

கடந்த நிதியாண்டில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ரூ.624 கோடி வருவாய் ஈட்டிய போதிலும், ரூ.1,003 கோடி இழப்பை சந்தித்துள்ளதாக 'குரோ' ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மெட்ரோவின் வருவாயை விட இழப்பு 160.8 சதவீதம் அதிகமாக உள்ள நிலையில், பெற்ற கடனுக்கான வட்டி மற்றும் தினசரி இயக்க செலவுகளே இந்த இழப்பிற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதே காலக்கட்டத்தில் பெங்களூரு மெட்ரோ ரூ.625 கோடி இழப்பையும், ஹைதராபாத் மெட்ரோ ரூ.626 கோடி இழப்பையும் சந்தித்துள்ளன.

தொடர்புடைய செய்தி

✕
✕