சென்னை விமானக் கட்டணம் மும்மடங்கு உயர்வு

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால் மக்கள் பல்வேறு இடங்களில் இருந்து சென்னை திரும்புகின்றனர். இதனால், விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்ந்துள்ளது. அதன்படி திருச்சி - சென்னை விமானக் கட்டணம் ரூ.4,529லிருந்து ரூ.14,404ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் மதுரை - சென்னை விமானக் கட்டணம் ரூ.5,800லிருந்து ரூ.17,303ஆக உள்ளது. மேலும், தூத்துக்குடி - சென்னை விமானக் கட்டணம் ரூ.6,623லிருந்து ரூ.17,272ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி