சென்னை நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, கிண்டி, ஆலந்தூரில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையில் இருந்து 50 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கக் கடலில் பல மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளது. கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
நன்றி: நியூஸ் தமிழ்