கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சவுக்கு சங்கர் பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு ஆபாசமாக பதிலளித்த வீடியோ வைரலாகி வருகிறது. சென்னை புழல் சிறைக்கு சவுக்கு சங்கரை மாற்றும் பொழுது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதன் காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் சிறைக்கு செல்லும் வழியில், பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு ஆபாசமான வார்த்தையால் பதிலளித்தது பத்திரிக்கையாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.