திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேரோட்டத்தின்போது இன்று (மே.31) தேரில் சிக்கி ஹர்ஷவர்தன் என்ற இளைஞர் உயிரிழந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் ஹர்ஷவர்தன் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வருங்காலங்களில் தேர் விபத்து போன்றவை ஏற்படாமல் தடுக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும். உயிரிழந்த இளைஞர் குடும்பத்திற்கு முதலமைச்சர் ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்” என்றார்.
நன்றி: நியூஸ்18