தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்த பிறகு, அமைச்சரவையில் மாற்றங்களைச் செய்ய முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி தவெகவைச் சேர்ந்த 3 முதல் 4 அமைச்சர்கள் மற்றும் அவர்களது பொறுப்பு வகிக்கும் துறைகள் மாற்றப்பட உள்ளன. இந்த மாற்றத்திற்கான பட்டியலில் ஒரு பெண் அமைச்சர் மற்றும் இரு ஆண் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.