ரேசன் கடை விடுமுறையில் மாற்றம்..பொங்கல் பரிசுக்காக புது உத்தரவு

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வரும் ஜன.8-ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இத்தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு மற்றும் இலவச வேட்டி-சேலையுடன், மக்கள் எதிர்பார்த்த ரூ. 3,000 ரொக்கப்பணம் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. விநியோக பணிகளை விரைவுபடுத்த ஏதுவாக, வழக்கமாக விடுமுறை நாளான ஜன.9-ம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும் என்றும், அதற்கு பதிலாக பிப்ரவரி 7-ம் தேதி விடுமுறை அளிக்கப்படும் என்றும் உணவு வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி