பான் அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கும் அல்லது அதில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கும் இனி ஆதார் அட்டை மட்டுமே போதுமானதாக இருக்காது என்றும், கூடுதல் ஆவணங்கள் கட்டாயமாக்கப்பட உள்ளதாகவும் புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் இனி பிறப்பு சான்றிதழ் போன்ற கூடுதல் சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும் என்பதால், புதிய நடைமுறை அமலுக்கு வரும் முன்பே நிலுவையிலுள்ள விண்ணப்பங்களை முடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.