சந்திரசேகரன் நியமனம் செல்லாது: டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடா எதிர்ப்பு

டாடா குழுமத்தின் தலைவராக சந்திரசேகரன் மீண்டும் நியமிக்கப்பட்டது சட்டவிரோதமானது என டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டாடா சன்ஸ் நிறுவன விதிகளின்படி தலைவரை நியமிக்க டாடா டிரஸ்ட்ஸ் பரிந்துரைக்கும் 2 இயக்குநர்களும் கூட்டத்தில் பங்கேற்று ஒருமனதாக ஆதரிக்க வேண்டும் என்ற நிலையில், தான் எதிராக வாக்களித்ததால் இந்நியமனம் சட்டப்படி செல்லாது என அவர் கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து தற்போது டாடா குழும உயர் மட்ட நிர்வாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕