தமிழ்நாட்டில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு இன்று (மே.16) வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. நாளை (ஏப்.17) திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி