இன்று (ஏப். 13) முதல் ஏப்ரல் 19 வரை டெல்டா, ராமநாதபுரம், காரைக்கால் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம், ஏப்ரல் 13 முதல் 17-ஆம் தேதி வரை உள் தமிழக மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் வெயிலுக்கு மத்தியில் இந்த செய்தி சற்று மகிழ்ச்சியை தந்துள்ளது.