தமிழ்நாட்டில் இன்று இரவு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று (பிப்.5) இரவு 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி