தமிழகத்தில் நாளை முதல், வரும் 9 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

தெற்கு கேரள கடலோரம் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் கீழடுக்கு சுழற்சியும், தென் கிழக்கு–தென்மேற்கு வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் 9-ந் தேதி வரை சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் மழை பெய்யலாம். மேலும் தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை ஜனவரி 7 வரை சில இடங்களில் 2–4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி