தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று (ஜூன்.01) முதல் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் ஜூன்.06-ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி