தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகில் நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று (டிச.24) முதல் அடுத்த 6 நாட்களுக்கு வடகடலோர தமிழகம் மற்றும் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.