தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று (நவ.3) ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் வரும் 8 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி