தென் தமிழகம், கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சத்தீஸ்கர் முதல் மன்னார் வளைகுடா வரை, தெலங்கானா, உள் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதனால் தென் தமிழகம், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று (ஏப்., 08) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரு் 14ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் இதே நிலை நீடிக்கும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

தொடர்புடைய செய்தி