10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

தென் மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று (பிப்., 22) நண்பகல் 1 மணிக்குள் 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, திருப்பூர், விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்.

தொடர்புடைய செய்தி