ஈரப்பதம் மிகுந்த காற்று குவிதல் மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் இன்று (ஆக.5) முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் கணித்துள்ளார். குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என அவர் கணித்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெப்பத்தின் தாக்கம் குறைந்து, சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.