தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, சேலம் உள்ளிட்ட 33 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.