தமிழகத்தில் கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.