தமிழகத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய 18 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.