22ஆம் தேதி 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, வேலூர், செங்கல்பட்டு, பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கடலோர தமிழகத்தை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் இதர தெற்கு கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕