காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, ஈரோடு, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய 10 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக ஆங்காங்கே இடி மின்னல் தாக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் திறந்தவெளியில் நிற்காமல் தகுந்த பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.