வங்கக் கடலில் உருவான ‘டிட்வா’ புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, சென்னை அருகே மையம் கொண்டுள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்கிறது. இந்நிலையில், மகாதீபம் ஏற்றப்படும் திருவண்ணாமலையில் இன்று (டிச.03) பிற்பகல் வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் கூறியுள்ளார். மேலும், மாலை தீபம் ஏற்றும் நேரத்தில் மழையின் தீவிரம் சற்று குறைய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நன்றி: நியூஸ் 18 தமிழ்நாடு