ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு பருவமழையின் இரண்டாம் பாதி காலமான ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வழக்கத்தை விட அதிகமான மழை பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரையில் நாட்டில் 47.43 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இது வழக்கமான மழை பொழிவை விட 6% அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: டிடி தமிழ் செய்திகள்

தொடர்புடைய செய்தி