செய்தித்தாளில் சாட் ஜிபிடி.. ஆசிரியர் கவனக்குறைவால் வைரலான தகவல்

நாளிதழ் ஒன்றில் செய்தி ஆசிரியர் சாட் ஜிபிடியைப் பயன்படுத்தி செய்தி எழுதிய சம்பவம் வைரலாகியுள்ளது. நேற்று (நவ.12) வெளியான நாளிதழின் வணிகப் பிரிவில், அக்டோபர் மாத வாகன உற்பத்தி குறித்த செய்திகள் அச்சிடப்பட்டுள்ளன. இறுதியில், சாட் ஜிபிடி உருவாக்கிய பத்தி தவறுதலாக இடம்பெற்றுள்ளது. அதில், 'ஒருவேளை உங்களுக்கு வேண்டுமென்றால், என்னால், இந்த செய்தியின் முதல் பாராவை இன்னும் சிறப்பாக மாற்றியமைத்துக் கொடுக்க முடியும்' என்ற அந்தப் பத்தி, செய்தி ஆசிரியர் கவனக்குறைவால் அச்சாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி