சென்னை ஐஐடி வளாகத்தில் இன்று (அக்.11) நடைபெற்ற விழாவில், தமிழகத்திற்கு ரூ.13,000 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது உரையாற்றிய அவர், புதிய திட்டங்கள் மூலம் தமிழ்நாடு விரைவான வளர்ச்சியடையும் என்றும், வளர்ந்த தமிழ்நாட்டின் பங்கேற்போடு வளமான பாரதத்தை உருவாக்குவோம் என்றும் உறுதியளித்தார். மேலும், தமிழகத்தின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு தொடர்ந்து வழங்கும் என அவர் உறுதியளித்தார்.
நன்றி:NewsTamil