இந்தியாவில் அதிகரித்து வரும் வர்த்தக பற்றாக்குறை அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில், வெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் படி, 99.9% அல்லது அதற்கு மேற்பட்ட தூய்மை கொண்ட வெள்ளிக் கட்டிகளை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியைக் குறைப்பதற்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் விரிவான கொள்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.