ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற மத்திய அரசு உத்தரவு

இஸ்ரேல்-ஈரான் இடையே மீண்டும் கடுமையான போர் பதற்றம் வெடித்துள்ளதை அடுத்து, ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதுகாப்பு கருதி இந்திய குடிமக்கள் யாரும் தற்போது ஈரானுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. எனவே, இந்தியர்கள் தற்போது கிடைக்கக்கூடிய போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி, தாமதிக்காமல் உடனடியாக தாயகம் திரும்புமாறு தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி