பாராகுவாட் டைகுளோரைடு களைக்கொல்லிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு

வேளாண்மையில் களைகளை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்ட பாராகுவாட் டைகுளோரைடு எனும் நச்சுத்தன்மை வாய்ந்த களைக்கொல்லியை மத்திய அரசு தடை செய்துள்ளது. மனிதர்களுக்கு நுரையீரல், சிறுநீரக பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தை விளைவிப்பதாக நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 1968-ம் ஆண்டு பூச்சிக்கொல்லிகள் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள இத்தடையால், இந்தியாவில் இதன் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு அனைத்தும் முற்றிலுமாக தடைசெய்யப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி

✕
✕