பெண்களின் திருமண வயதை உயர்த்த மத்திய அரசு பரிசீலனை

பெண்களின் சட்டப்பூர்வ திருமண வயதை 18-லிருந்து 21-க உயர்த்துவது குறித்து பரிசீலித்து வரும் மத்திய அரசு, இதுகுறித்த இறுதி முடிவை 2027-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் எடுக்க திட்டமிட்டுள்ளது. உயர்கல்வி, பொருளாதார சூழல் மற்றும் தாமதத் திருமணத்தால் ஏற்படும் கருவுறுதல் பாதிப்புகள் போன்ற முக்கிய காரணிகள் இந்த முடிவின்போது விரிவாக ஆராயப்படவுள்ளன. சமீபத்திய ஆய்வில் நகரங்களில் பெண்களின் சராசரி திருமண வயது 24, கிராமப்புறங்களில் 22 என உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி