ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்கம் தோண்டுவதற்கு அனுமதி அளிக்கப்படுவதாக எழுந்த புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அங்கு புதிய சுரங்க பணிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள உத்தரவில், எந்தவொரு புதிய சுரங்க குத்தகைகளையும் வழங்க கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி முதல் குஜராத் வரை நீண்டுள்ள ஒட்டுமொத்த ஆரவல்லி மலைத்தொடரையும் மத்திய அரசே பாதுகாக்கும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.