விதிகளை மீறி செயல்பட்ட 5 OTT தளங்களுக்கு மத்திய அரசு தடை

ஆபாசம் மற்றும் சட்டவிரோத உள்ளடக்கங்களை வெளியிட்டதாக, விதிகளை மீறி செயல்பட்ட 5 OTT தளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. JUGNU, FEEL, MOODXVIP, KOYAL PLAYPRO மற்றும் DIGI MOVIEPLEX ஆகிய தளங்கள் தணிக்கை இன்றி ஆபாச காட்சிகளை பரப்பியதாக கண்டறியப்பட்டு முடக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் தளங்களில் முறையான பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்றுவதை உறுதிசெய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி