மத்திய அரசின் PM-கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வருகிற 24ஆம் தேதி அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 19ஆவது தவணையான இந்த உதவித் தொகையை நாடு முழுவதும் 9.8 கோடி விவசாயிகள் பெற உள்ளனர். முன்னதாக இந்த உதவித் தொகையை வழக்கமாகப் பெறும் விவசாயிகள் தங்களது வங்கிக் கணக்கில், eKYC-யை செய்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.