“தாக்குதலை நிறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தேசிய கொடியை கையில் ஏந்தி சென்னை காமராஜர் சாலையில் ஒற்றுமை பேரணி நடைபெற்றது. இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகையில், “இந்திய ஆயுதப்படைகளுடன் தமிழ்நாடு ஒற்றுமையுடன் அணிவகுத்தது. தாக்குதலை நிறுத்தியிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை. நமது எல்லைகளைக் காக்கும் வீரர்களின் துணிச்சலுக்கு மனமார்ந்த வணக்கம்” என்றார்.

தொடர்புடைய செய்தி