தேசிய கல்வி கொள்கை 2020 அடிப்படையில் மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), 2026-27 கல்வி ஆண்டில் மும்மொழி கொள்கையை அறிமுகம் செய்யவுள்ளதாக முன்னணி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக 6-ம் வகுப்பிற்கு 3 மொழி திட்டம் கொண்டுவரப்படவுள்ளதாகவும், அதற்கான 9 மொழிகளுக்கான பாடத்திட்ட புத்தகங்கள் உருவாக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.