ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை மனநலப் பயிற்சி: சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு

மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், சிபிஎஸ்இ ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை மனநல நிபுணர்கள் மூலம் சிறப்புப் பயிற்சி அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களிடம் காணப்படும் மனநலப் பாதிப்புகளை கண்டறிதல் மற்றும் அவர்களுக்கு உளவியல் ரீதியிலான முதலுதவி வழங்குதல் போன்ற அம்சங்கள் இப்பயிற்சியில் இடம்பெற உள்ளன. இன்றைய கல்வி சூழலில் மாணவர்களின் மனநலனை பாதுகாப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்தி