CBSE 2026-ஆம் ஆண்டிற்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை இந்த மாத இறுதியில் வெளியிடத் தயாராகி வருகிறது. வழக்கமாக மே மாதத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு முடிவுகள் ஒன்றாக வெளியிடப்படும். ஆனால், இந்த கல்வி ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'இரட்டைத் தேர்வு முறை' காரணமாக, முதல் கட்டத் தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதத்திலேயே வெளியாகவுள்ளன. முதல் கட்டத் தேர்வில் திருப்தி அடையாத மாணவர்கள், வரும் மே 15 முதல் ஜூன் 1, 2026 வரை நடைபெறவுள்ள இரண்டாவது கட்டத் தேர்வில் பங்கேற்கலாம்.