சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் ஒரு மணி நேரம் நடைபெற்ற சிபிஐ விசாரணை நிறைவடைந்துள்ளது. கரூர் சம்பவம் தொடர்பான சிசிடிவி ஆதாரங்களை சிபிஐ அதிகாரிகள் கேட்டதாகவும், சம்மன் கொடுக்க வந்ததாகவும் தவெக இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மேலும், ‘விசாரணை ஏதும் நடக்கவில்லை’ என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, தவெக நிர்வாகிகள் மற்றும் கட்சியின் தலைவர் விஜய்யிடம் விசாரணை நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.