மேகதாது அணை பிரச்னை தொடர்பாக முதலமைச்சர் விஜய் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடக்கிறது. சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், தலைமைச் செயலாளர், துறைகளின் செயலாளர், அதிகாரிகளுடன் கர்நாடக பயணம் குறித்து ஆலோசிக்கிறார். கர்நாடகா சென்று அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரை, முதலமைச்சர் விஜய் சந்திக்க திட்டமிட்டிருக்கும் சூழலில் இந்த ஆலோசனை முக்கியத்துவம் பெறுகிறது.