"காவிரி ஒரு அரசியல் ஆயுதம் அல்ல".. மாணிக்கம் தாகூர் எம்பி ஆவேசம்

மேகதாது அணை விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “காவிரி ஒரு அரசியல் ஆயுதம் அல்ல; அது தமிழ்நாட்டில் வாழும் கோடிக்கணக்கான மக்களின் உயிர்நாடியாகும். தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் காவிரி ஆற்றின் மீது எந்த புதிய அணையும் கட்ட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. இருந்தபோதிலும், கர்நாடக துணை முதலமைச்சர் தொடர்ந்து தூண்டுதல் நிறைந்த கருத்துகளை வெளியிடுகிறார்” என்றார்.

தொடர்புடைய செய்தி