தவெகவில் சாதி பார்த்து பதவி வழங்கப்படுகிறது என அக்கட்சி நிர்வாகி குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெகவில் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வரும் நிலையில், திருவண்ணாமலையை சேர்ந்த நிர்வாகி ஒருவர், தலைவர் விஜய் சாதிக்கே இங்கு பேச்சில்லை என்று கூறினார். ஆனால், இங்கு தாழ்த்தப்பட்ட சாதியினர் மேலே வராக்கூடாது என செயல்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக, பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஐயாவையும் சந்தித்து விட்டோம் என்று தனது மனக்குமுறலை தெரிவித்துள்ளார்.
நன்றி: சன் நியூஸ்