சீமான் மீது சென்னையில் வழக்குப்பதிவு

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சீமான் வீட்டின் முன் போராட்டம் நடந்த வந்த பெரியாரிய ஆதரவாளர்களை தாக்க பதுங்கி இருந்ததாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. சட்டவிரோதமாக கூடுதல், தடுத்தல், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் சீமான் உள்ளிட்ட 180 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, அன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்ட திக, தபெதிக, மே 17 இயக்கம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்டேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி