நெஸ்லே நிறுவனத்தின் 'நான் எக்செல்லா புரோ', 'லாக்டோஜென் புரோ' ஆகியவற்றின் விளம்பரங்களில் விதிமுறைகளுக்கு மாறாகத் தகவல்கள் இடம்பெற்றதாக 2 வழக்குகளும், 'பாலோ அப் பார்முலா' பவுடரில் வைட்டமின் பி7 (பயோட்டின்) அளவு குறைவாக இருந்ததாக 1 வழக்கும் என மொத்தம் 3 வழக்குகளை எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. பதிவு செய்துள்ளது. இதற்கு விளக்கமளித்துள்ள நெஸ்லே, தங்கள் தயாரிப்புகளும் லேபிள்களும் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டே உள்ளதாகத் தெரிவித்துள்ளது.