புதுச்சேரியில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது SIR குறித்து கேட்ட செய்தியாளரை நாதக தமைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒருமையில் பேசி, தகாத வார்த்தைகளால் திட்டினார். மேலும் அவரது ஆதரவாளர்கள் அந்த செய்தியாளரை தாக்கியுள்ளனர். இந்நிலையில், சீமான் மற்றும் நாதக ஆதரவாளர்கள் மீது வில்லியனூர் காவல் நிலையத்தில் தகாத வார்த்தையில் திட்டுதல், தாக்குதல் மற்றும் கொலை மிரட்டல் பிரிவுகளில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.