அமைச்சர் ரமேஷ் குறித்து அவதூறு பரப்பியதாக 3 பேர் மீது வழக்கு பதிவு

பழனி கோயில் நில விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய இந்திராணி, பூர்ணிமா, வினோத் ஆகிய 3 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கலவரத்தை தூண்டுதல், வதந்தி பரப்புதல், இரு பிரிவினரிடையே பகைமையை உருவாக்குதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது அமைதியை குலைக்கும் வகையில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி