பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் நேற்று (மே 26) மோதிக்கொண்ட திமுக மற்றும் விசிகவினர் 120 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அபாயகரமான ஆயுதங்களைக் கொண்டு கலகம் விளைவித்தல், பொது இடங்களில் ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற இந்த மோதல் தொடர்பாகக் குன்னம் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.